உள்ளூர் செய்திகள்

சங்கராபுரம் அருகே பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது

Update: 2022-06-30 09:33 GMT
  • சங்கராபுரம் அருகே பெண்ணை கொன்று புதைத்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
  • பணத்தை பெற்றுக் கொண்ட தனலட்சுமி அரிசி வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது.

கள்ளக்குறிச்சி: 

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே விரியூர் கிராமத்தை சேர்ந்தவர் வீராசாமி(வயது 60). இவர் அதேஊரை சேர்ந்த அரிசி மொத்த வியாபாரியான தனலட்சுமி என்பவரிடம் அரிசி வாங்கி தருமாறு ரூ.15 லட்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது. பணத்தை பெற்றுக் கொண்ட தனலட்சுமி அரிசி வாங்கி தராமலும், பணத்தை திருப்பி தராமலும் காலம் தாழ்த்தி வந்ததாக தெரிகிறது. ஆத்திரமடைந்த வீராசாமி மற்றும் அவருடைய மகன் விக்னேஷ்(26) ஆகியோர் தனலட்சுமியின் தாய் ஆண்டாளை(55) அழைத்துச் சென்று கொலை செய்து புதூர் சுடுகாட்டில் புதைத்து விட்டனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வடபொன்பரப்பி போலீசார் வழக்குப்பதிந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு வீராசாமி, விக்னேஷ் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை சம்பவத்தில் ஆண்டாளை சுடுகாட்டில் புதைக்க உடந்தையாக இருந்த திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த அல்லப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த சீனு (34) என்பவரை வடபொன்பரப்பி போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், தனிப்பிரிவு சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

Tags:    

Similar News