உள்ளூர் செய்திகள்

பெரியசூரம்பாளையம் அருகே சாலை விபத்தில் விவசாயி பலி; கோவில் தர்மகர்த்தா படுகாயம்

Published On 2023-05-23 14:27 IST   |   Update On 2023-05-23 14:27:00 IST
  • நடந்தை அருகே உள்ள பெரிய சூரம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (88). இவர் பெரியசூரம்பாளையத்தில் உள்ள பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.
  • முன் தினம் இரவு சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் தர்மகர்த்தா கந்தனை பின்னால் அமரவைத்துக்கொண்டு பெரியசூரம்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, நடந்தை அருகே உள்ள குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 44) விவசாயி. நடந்தை அருகே உள்ள பெரிய சூரம்பாளையத்தை சேர்ந்தவர் கந்தன் (88). இவர் பெரியசூரம்பாளை யத்தில் உள்ள பெருமாள் கோவில் தர்மகர்த்தாவாக உள்ளார்.

நேற்று காலை பெரிய சூரம்பாளையம் பெருமாள் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற இருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா கந்தன், மும்முரமாக செய்து வந்தார்.

இந்த நிலையில் நேற்று முன் தினம் இரவு சக்திவேல் தனது மோட்டார் சைக்கிளில் தர்மகர்த்தா கந்தனை பின்னால் அமரவைத்துக்கொண்டு பெரியசூரம்பாளையம் நோக்கி சென்று கொண்டி ருந்தார். செஞ்சுடையாம்பா ளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது, சக்திவேல் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் நிலைதடுமாறி சாலை ஓரத்தில் இருந்த தென்னை மரத்தின் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இதில் சக்திவேலும், கந்த னும் கீழே விழுந்து படு காயம் அடைந்து உயி ருக்கு போராடியுள்ளனர். இதை பார்த்த அவ்வழியாக வந்த வர்கள் அவர்கள் இரு வரையும் மீட்டு பரமத்தி வேலூர் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே சக்திவேல் பரிதாபமாக இறந்தார்.

படுகாயம் அடைந்த கந்தனை டாக்டர்கள் நாமக்கல் அரசு ஆஸ்பத்தி ரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவ மனைக்கு கந்தன் அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த சம்பவம் குறித்து பரமத்தி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் கோவில் தர்மகர்த்தாவான கந்தன் படுகாயம் அடைந்ததை தொடர்ந்து நேற்று காலை நடைபெற இருந்த பெரு மாள் கோவில் கும்பாபி ஷேகம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

Tags:    

Similar News