உள்ளூர் செய்திகள்

உண்டியல் பணம் கொள்ளை நடந்த விநாயகர் கோவிலை படத்தில் காணலாம்.

பண்ருட்டி அருகே விநாயகர் கோவில் உண்டியலை உடைத்து பணம் கொள்ளை

Published On 2022-08-19 08:49 GMT   |   Update On 2022-08-19 08:49 GMT
  • கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார்.
  • கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.

கடலூர்:

பண்ருட்டி அருகே கீழிருப்பு கிராமத்தில் ஊருக்கு நடுவே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இங்கு கோவில் பூசாரி சபாபதி பூஜையை முடித்து கோவிலை பூட்டிக்கொண்டு இரவு 10 மணிக்கு வீட்டுக்கு சென்றார். வழக்கம் போல கோவிலை திறப்பதற்காக இன்று காலை பூசாரி சபாபதி கோவிலுக்கு வந்தார். கோவிலில் காணிக்கை உண்டியல் உடைக்கப்பட்டு பணம், நகை கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது. இது பற்றி காடாம்புலியூர் போலீசில் புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் மற்றும் முத்தாண்டி குப்பம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர். கீழிருப்பு கிராமத்தில் தொடர்ந்து கோவில் உண்டியல் உடைப்பு சம்பவம் நடைபெற்று வருவதால்குற்றவாளிகளை கண்டுபிடித்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட செயலாளர் கீழிருப்பு சிவகுமார் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Tags:    

Similar News