உள்ளூர் செய்திகள்

போக்சோவில் கைதான 2பேரை படத்தில் காணலாம். 

பண்ருட்டி அருகே: தாய், மகளுக்கு பாலியல் தொந்தரவு: 2 வாலிபர்கள் போக்சோவில் கைது

Update: 2022-07-03 10:10 GMT
  • பண்ருட்டி அருகே தாய், மகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த 2 வாலிபர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டனர்.
  • கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர்.

கடலூர்:

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கீழக்குப்பத்தை சேர்ந்த 35 வயது பெண் தனது 12 வயது மகளுடன் கடந்த 2 நாட்களுக்கு முன்பு தோப்புகொல்லைஅருகே இருசக்கர வாகனத்தில்சென்றார். அப்பொழுது நடுகுப்பம் கிராமத்தை சேர்ந்த செல்வகுமார் (24), ஆதிகுரு (22) ஆகிய இருவரும், மகளுடன் சென்ற அந்த பெண்ணின் இருசக்கர வாகனத்தைவழிமறித்து சாவியை எடுத்துக்கொண்டு அருகிலிருந்த தோப்புக்குள்செ ன்றுள்ளனர். சாவி யை கொடுங்கள் என கேட்டுஅவர்களை பின்தொடர்ந்து சென்ற அந்த பெண்ணிடம் பாலியல்சீண்டலில்ஈடுபட்டுள்ளனர். அப்போது 2 பேரும் சிறுமியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொந்தரவு செய்தனர்.

அவர்கள் பிடியில் இருந்து தப்பி வந்த அந்த பெண் இதுகுறித்து பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில்காந்திமதி புகார் கொடுத்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் வள்ளி இது குறித்து வழக்கு பதிவு செய்துவிசாரணை நடத்தினார். விசாரணையில் 2 வாலிபர்களும் தாய்- மகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரிய வந்தது. இதனை தொடர்ந்துபோக்சோ, பெண் வன்கொடுமைதடுப்பு சட்டம் ஆகிய 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர். கைதான 2 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்ப ட்டனர்.

Tags:    

Similar News