உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே கஞ்சா விற்ற வாலிபர் கைது
- சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
- 110 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
கிருஷ்ணகிரி.
கிருஷ்ணகிரி பழைய ஹவுசிங் போர்டு பகுதியில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கமலேசன் மற்றும் போலீசார் ரோந்து மேற்கொண்டனர்.
அப்போது சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரை பிடித்து விசாரித்தனர்.
அந்த வாலிபர் பழைய ஹவுசிங் போர்டு பகுதியை சேர்ந்த தர்மராஜ் என்பவரது மகன் ராகுல் (வயது 23) என்பதும். அவர் கஞ்சா விற்பதும் தெரியவந்தது.
அவரை கைது செய்த போலீசார் 110 கிராம் கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.