உள்ளூர் செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே குவாரி தொழிலாளி விபத்தில் பலி
- பாறையிலிருந்து தவறி விழுந்து படுகாய மடைந்தார்.
- மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி அருகே பெரியமாட்டாரபள்ளி பகுதியை சேர்ந்தவர் மாதையன் (வயது 45). குவாரி தொழிலாளியான மாதையன் எதிர்பாராத விதமாக பாறையிலிருந்து தவறி விழுந்து படுகாய மடைந்தார். தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து மஹாராஜாக்கடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.