உள்ளூர் செய்திகள்
கல்லாவி அருகே குடிபோதையில் விவசாயியை தாக்கியவர் கைது
- குடிபோதையில் விக்கிரமசோழன் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராமமூர்த்தி என்பவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார்.
- புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விக்கிரமசோழனை கைது செய்தனர்.
மத்தூர்,
கிருஷ்ணகிரி அருகேயுள்ள கல்லாவி அருேக மன்னடிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் விக்கிரமசோழன்.
இவர் குடிபோதையில் தனது பக்கத்து வீட்டுக்காரரான ராமமூர்த்தி என்பவரிடம் தகராறு செய்து தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த ராமமூர்த்தி ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து ராமமூர்த்தி கல்லாவி போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து விக்கிரமசோழனை கைது செய்தனர்.