உள்ளூர் செய்திகள்

தாழங்குடா கடற்கரையில் ஒதுங்கிய மரச்சிலையை படத்தில் காணலாம்.

கடலூர் அருகே கடற்கரையில் ஒதுங்கிய பழங்காலத்து மரச்சிலை

Published On 2022-08-23 14:15 IST   |   Update On 2022-08-23 14:15:00 IST
  • காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது.
  • கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

கடலூர்:

கடலூர் அருகே தாழங்குடா மீனவ கிராமம் உள்ளது. இன்று காலை கடற்கரை ஓரமாக மர்ம பொருள் கடல் அலையில் அடித்து வந்து கரை ஒதுங்கியது. அப்போது அவ்வழியாக சென்ற மீனவர்கள் அதனை எடுத்து பார்த்தபோது பழங்காலத்து மரச்சிலையாக இருந்தது‌. மேலும் அந்த சிலை ஆங்கிலேயர் போலீஸ் மரசிலை என தெரியவந்தது. இதனை தொடர்ந்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வருவாய்த்துறை அலுவலகத்துக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் கடலூர் கடலோர காவல் படை போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சிலை குறித்து விசாரணை நடத்தி பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News