உள்ளூர் செய்திகள்

குன்னூர் அருகே குடியிருப்பில் சுற்றும் சிறுத்தையை பிடிக்க கூண்டு

Published On 2022-08-24 15:45 IST   |   Update On 2022-08-24 15:57:00 IST
  • இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர்.
  • வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.

குன்னூர்,

நீலகிரி மாவட்டம் குன்னூர் ஓட்டுபட்டறை அருகே உள்ள அம்பிகாபுரம் கிராமத்தில் கடந்த ஒரு வார காலமாக இரவு நேரத்தில் கிராமத்துக்குள் நுழைந்து குடியிருப்புகளை நோட்டமிடும் சிறுத்தையால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

மேலும் அங்கு பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் சிறுத்தை வந்து செல்லும் காட்சிகள் பதிவாகி உள்ளது. இந்த நிலையில் அந்தப் பகுதியில் வனத்துறையினர் ஆய்வு மேற்கொண்டனர்.

மேலும் இரவு நேரங்களில் யாரும் வெளியே வர வேண்டாம் என எச்சரிக்கை விடுத்திருந்தனர். இந்த நிலையில் தற்போது அந்தப் பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வரவழைக்கப்பட்டது.

நாள்தோறும் சிறுத்தை வந்து செல்லும் பகுதியில் நேற்று கூண்டு வைக்கப்பட்டது. கூண்டிற்குள் கம்பிகள் சூழ்ந்த தடுப்புக்குள் ஆடுவைக்கப்பட்டுள்ளது. அதே போல் கூண்டை சுற்றி தேயிலை செடிகள் வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தையை பிடிக்க அதே இடத்தில் வனத்துறையினர் இருந்து கண்காணித்து வருகின்றனர்.

Tags:    

Similar News