உள்ளூர் செய்திகள்
விபத்துகளை தடுக்க பாம்பாறு பாலம் அருகில் விழிப்புணர்வு பலகை வைக்க கோரிக்கை
- லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
- இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே கிருஷ்ணகிரி திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலை அமைந்துள்ள பாம்பாறு அணை அருகில் ஆற்றின் குறுக்கே புதியதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் விழிப்புணர்வு தகவல் பலகைகள் மற்றும் எச்சரிக்கை விளக்குகள் பொருத்த அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற லாரி கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் இல்லை.
இதுபோல் பல சம்பவங்கள் இந்த பகுதியில் நடைபெறுவதால் சாலை விதிகள் குறித்து எச்சரிக்கை பலகைகள் வைக்க பொதுமக்கள் அரசுக்கு மீண்டும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.