உள்ளூர் செய்திகள்

கோவிலில் கொலு வைக்கப்பட்டிருந்தது.

பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா தொடக்கம்

Published On 2023-10-16 10:00 GMT   |   Update On 2023-10-16 10:00 GMT
  • நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது.
  • ஏராளமான பக்தர்கள் கொலு கண்காட்சியை பார்வையிட்டனர்.

திருத்துறைப்பூண்டி:

திருத்துறைப்பூண்டி பெரியநாயகி உடனுறை பிறவி மருந்தீஸ்வரர் கோவிலில் 11-வது ஆண்டு நவராத்திரி விழா வெகு விமரிசயைாக தொடங்கியது.

விழாவில் கோவில் செயல் அலுவலர் முருகையன் தலைமை தாங்கினார். சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு செயலாளர் ஜெயப்பிரகாஷ், ஒருங்கிணைப்பபாளர் துரை ராயப்பன், கோவில் ஊழியர் ராஜ்மோகன், டாக்டர் பாண்டியன், ஓய்வு பெற்ற தலைமையாசியர் தங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முதல் நாள் நிகழ்வில் பிறவி மருந்தீஸ்வரர் கோவிலின் நாதஸ்வர வித்வான் சுவாமிநாதன் மகன்கள் பூர்ணசந்திரன், தமிழிசை வேந்தன், காளிதாஸ் ஆகியோரின் சிறப்பு நாதஸ்வர நிகழ்ச்சியும், தவிலிசை கலைஞர்களான ஆதிரெங்கம் தவிலிசை மாமுரசு பாலசங்கர், தவிலிசை இளவரசு, ஜெகதீஷ் ஆகியோரின் தவிலிசை நிகழ்ச்சியும் நடந்தது.

முன்னதாக நவராத்திரி விழாவை முன்னிட்டு நடராஜர் சன்னதியில் கொலு வைக்கப்பட்டிருந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து கொலுவை பார்வையிட்டனர்.

தொடர்ந்து, வருகிற 24-ந் தேதி வரை நடைபெறும் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சர்வாலய அருட்பணி அறப்பணிக்குழு மற்றும் நவராத்திரி குழுவினர் செய்துள்ளனர்.

Tags:    

Similar News