உள்ளூர் செய்திகள்

ஸ்ரீராம் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினத்தையொட்டி மரக்கன்றுகள் வழங்கப்பட்ட காட்சி

கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம்

Published On 2023-07-29 10:19 GMT   |   Update On 2023-07-29 10:19 GMT
  • மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகளைக் கொடுத்து கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஊர்வலம் சென்றனர்.
  • பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்பதை பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

தருமபுரி,

கம்பைநல்லூர் ஸ்ரீராம் பள்ளியில் இயற்கை பாதுகாப்பு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

பள்ளி மாணவர்கள் இயற்கையை பாதுகாப்பதன் அவசியத்தை பற்றிய வாசகங்கள் அடங்கிய அட்டைகளை கையில் ஏந்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மஞ்சள் பை மற்றும் மரக்கன்றுகளைக் கொடுத்து கோஷங்களை எழுப்பி ஊர்வலம் சென்றனர்.

பள்ளியின் தாளாளர் வேடியப்பன் மற்றும் சாந்தி வேடியப்பன் ஆகியோர் மஞ்சள்பை மற்றும் மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர். பள்ளியின் நிர்வாக இயக்குநர் தமிழ்மணி மற்றும் பவானி தமிழ்மணி ஊர்வலத்தை தொடங்கி வைத்தனர்.

பள்ளி முதல்வர் சாரதி மகாலிங்கம், மாணவ, மாணவி மற்றும் பொதுமக்களுக்கு பிளாஸ்டிக் உபயோகிப்பதை தவிர்ப்பதை பற்றியும் மரக்கன்றுகளை நடுவதன் அவசியத்தை பற்றியும் இயற்கை வளங்களை பாதுகாப்பதன் முக்கியத்து வத்தைப் பற்றியும் எடுத்து ரைத்தனர்.

இந்த ஊர்வலர்த்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் பள்ளியின் ஒருங்கிணைப் பாளர் புவனேஷ்வரி தலைமையில் அறிவியல் துறை ஆசிரியை ஆசிரியர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த ஊர்வலத்தில் ஒருங்கிணைப்பளர்கள் குருமூர்த்தி, மணிமேகலை, பிரவீணா பங்கேற்றனர். 

Tags:    

Similar News