உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் நாளை நடக்கிறது: தேசிய விளையாட்டு தின போட்டிகள்

Published On 2023-08-28 15:15 IST   |   Update On 2023-08-28 15:15:00 IST
  • நாளை தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடைபெற உள்ளது
  • தருமபுரியில் உள்ள மாவட்ட விளை யாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நாளை நடைபெற உள்ளது.

தருமபுரி,

தருமபுரியில் தேசிய விளையாட்டு தின போட்டிகள் நாளை நடக்கிறது. இது குறித்து தருமபுரி மாவட்ட விளையாட்டு இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தமிழகம் முழுவதும் தேசிய விளையாட்டு தினத்தையொட்டி நாளை (செவ்வாய்க்கிழமை) தேசிய விளையாட்டு தின போட்டிகள் நடைபெற உள்ளது.

அதன்படி தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கில் தேசிய விளையாட்டு தின போட்டி கள் நாளை நடைபெற உள்ளது.

19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவி களுக்கு கைப்பந்து மற்றும் 100 மீட்டர் தடகள போட்டிகளும், 25 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கூடைப் பந்து மற்றும் 100 மீட்டர் தடகள போட்டிகளும், 45 வயதிற்குட் பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கு 1கி.மீ நடைபோட்டிகளும் நடைபெறும்.

19 வயதிற்குட் பட்டவர்கள் பிரிவில் 01.01.2005-க்கு பின்னர் பிறந்தவர்களும், 25 வயதிற்குட்பட்ட வர்கள் பிரிவில் 01.01.1999-க்கு பின்னர் பிறந்தவர்களும், 45 வயதிற்குட்பட்டவர்கள் பிரிவில் 01.01.1979-க்கு பின்னர் பிறந்தவர்களும் கலந்து கொள்ளலாம்.

போட்டிகளில் கலந்து கொள்ள விரும்பும் விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் நாளை காலை 8 மணிக்கு உரிய ஆவணங்களுடன் தருமபுரியில் உள்ள மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் முன்பதிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.

Tags:    

Similar News