தருமபுரியில் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்
- தருமபுரியில் ஒய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்பாட்டம் நடைபெற்றது.
- அனைவருக்கும் முறையான பேன்சன் வழங்க வேண்டும்
உலக முதியோர் தினம் மற்றும் பென்சன் பாதுகாப்பு நாள் தேசிய ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் முடிவின்படி ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் முதல் தேதியை ஓய்வூதியர் தினமாக உலகதொழிற்சங்கத்தின் அங்கமான சர்வதேச தொழிற்சங்க ஓய்வூதியர் மற்றும் பணி ஓய்வுபெற்றோர் அமைப்பு அனுசரித்து வருகிறது.
மரியாதையான வாழ்க்கை என்பது அனைவரின் அடிப்படையான உரிமை, அனைவருக்கும் முறையான பென்சன், நல்ல உறைவிடம், சுகாதாரமான குடிநீர், ஆரோக்கியமான உணவு, சிறந்த மருத்துவம், தரமான போக்குவரத்து, இவை யாராலும் மறுக்க முடியாத உரிமையாகும். இவை அனைத்தும் கிடைத்திட கோரி பென்சன் பாதுகாப்பு நாள் ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில் கூட்டமைப்பு மாவட்ட செயலாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். தமிழ்நாடு அரசு அனைத்துத்துறை ஓய்வூதூயர் சங்க மாவட்ட செயலாளர் பெருமாள், அரசு போக்குவரத்து கழக ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாநில இணைசெயலாளர் குப்புசாமி, தமிழ்நாடு மின்வாரிய ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் மாவட்ட தலைவர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் விஜியன், பிஎஸ்என்எல் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிருஷ்ணன், எல்ஐசி ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் சோமசுந்திரம் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர்.