உள்ளூர் செய்திகள்
திருவிழாவில் பூக்குழி இறங்கிய பக்தர்களை படத்தில் காணலாம்.

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா பக்தி பரவசத்துடன் பூக்குழி இறங்கிய பக்தர்கள்

Published On 2023-03-08 10:34 IST   |   Update On 2023-03-08 10:34:00 IST
  • நத்தம் மாரியம்மன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் பூக்குழி இறங்கினர்.
  • மேலும் பக்தர்கள் பல்வேறு நேர்த்திக்கடன்னை செய்தனர்.

நத்தம்:

நத்தம் மாரியம்மன் கோவில் மாசி திருவிழா கடந்த மாதம் 20ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மறுநாள் உலுப்பகுடி அருகே உள்ள கரந்தமலை கன்னிமார் தீர்த்தத்தில் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் புனித நீராடி மஞ்சள் ஆடைகள் அணிந்து கோயிலுக்கு வந்து காப்பு கட்டி 15நாட்கள் விரதம் தொடங்கினர்.

அன்றிரவு அம்மன் குளத்தி லிருந்து கம்பம் நகர்வலமாக எடுத்துவரப்பட்டு கோவி லில் ஸ்தாபிதம் செய்ய ப்பட்டது.

தொடர்ந்து மாரியம்ம னுக்கு மஞ்சள் திருப்பா வாடை ஊர்வலமாக எடுத்து வந்து காணிக்கையாக செலுத்தினர்.அன்று அரண்மனை பொங்கல் வைத்தல், காவடி எடுத்து வருதல் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.நேற்று அதிகாலையிலிருந்து பிற்பகல் வரை பக்தர்கள் அக்கினிசட்டி எடுத்தல், அலகு குத்தி வருதல், மாறுவேடமணிந்து வருவது மற்றும் பறவை காவடிகள், போன்ற பல்வேறு நிகழ்வுகள் நடந்தது.

மேலும் மேளதாளம் முழங்க தாம்பாளத்தில் அம்மனுக்காக அர்ச்சனை பொருட்களை மஞ்சள் துணியால் கட்டிக் கொண்டு ஊர்வலமாக பக்தர்கள் வந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு நீண்ட வரிசையில் காத்திருந்து பூக்குழி இறங்க சென்றனர். முன்னதாக கோவில் முன்பாக கழுகு மரம் ஊன்றப்பட்டிருந்தது.

பின்னர் கழுகு மரம் ஏறும் நிகழ்ச்சியும் நடந்தது.அதைதொடர்ந்து 15 நாட்கள் விரதம் இருந்த பக்தர்கள் பூக்குழியில் பூசாரிகள் இறங்கிய பின்னர் ஒருவர் பின் ஒருவராக வரிசையாக இறங்கினர்.

முன்னதாக பக்தர்கள் தங்களது வேண்டுதல்கள் நிறைவேறியதற்காக கரும்புதொட்டில்கள் எடுத்தல், அங்கப்பிரத ட்சணம் செய்தல், மாவி ளக்கு எடுத்தல், பொங்கல் வைத்தல் போன்றவைகளும், பூக்குழியில் போடுவதற்காக விறகு கட்டைகளையும், உப்பு, மிளகு பொட்டலங்க ளையும் காணிக்கையாக செலுத்தி வழிபட்டனர்.

நேற்று இரவு கோவிலி லிருந்து கம்பம் அம்மன் குளத்தில் கொண்டு போய் சேர்க்கப்பட்டது. இன்று புதன் கிழமை காலையில் மாரியம்மன் மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியை தொடர்ந்து இரவு அலங்கரி க்கப்பட்ட பூப்பல்லக்கில் சர்வ அலங்காரத்தில் எழுந்தருளி அம்மன் குளத்திலிருந்து புறப்படும்.

Tags:    

Similar News