உள்ளூர் செய்திகள்

சட்ட விரோதமாக மது விற்ற விசைத்தறி கூட மேலாளர் கைது

Published On 2023-07-28 07:02 GMT   |   Update On 2023-07-28 07:02 GMT
  • விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.
  • இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

குமாரபாளையம்:

வெப்படை போலீசார் காவல் நிலையத்திற்கு உட்பட பகுதியில் சட்ட

விரோதமாக மதுவிற்பனை செய்வது குறித்து போலீசா ருக்கு தொடர்ந்து புகார் வந்தன. இந்நிலையில் வால்ராசபாளையம் பகுதி யில் சட்டவிரோதமாக மது விற்பனை செய்ய மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டுள்ளதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதன் பேரில் வெப்படை சப்-இன்ஸ்பெக்டர் மலர்விழி தலைமையில் போலீசார் அதே பகுதியில் உள்ள விசைத்தறி கூடத்தின் மேலே உள்ள வீட்டில் சோதனை செய்தனர்.

அப்போது விசைத்தறி கூடத்தின் மேலாளராக வேலை பார்த்து வரும் சித்திக் என்பவர் சட்டவிரோதமாக மது விற்பனை செய்து வந்ததும், மதுபாட்டில்களை விற்பனை செய்ய பெட்டி பெட்டியாக வாங்கி வைத்திருந்ததும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து 21 பெட்டிகளில் பல்வேறு மதுவகைகளை கொண்ட 704 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்கள் போலியா னதா அல்லது அரசு மதுபான கடை பாட்டில்களா என்பது குறித்து சேலம் ரசாயன ஆலைக்கு சோதனைக்காக போலீசார் அனுப்பி உள்ளனர்.

Tags:    

Similar News