உள்ளூர் செய்திகள்

பரமத்திவேலூர் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

Published On 2023-08-31 07:42 GMT   |   Update On 2023-08-31 07:42 GMT
  • நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், பகுதிகளில் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது.
  • அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது.

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர், நன்செய் இடையாறு, பாலப்பட்டி, மோகனூர், பொத்தனூர், பாண்டமங்கலம், வெங்கரை, பரமத்தி, பொன்மலர்பாளையம், கொந்தளம், சேளூர், பிலிக்கல் பாளையம், குன்னத்தூர், ஆனங்கூர், வடகரையாத்தூர், கொத்தமங்கலம், சோழசிராமணி, பெருங்குறிச்சி, மணியனூர், கபிலர்மலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு சுமார் 7 மணிக்கு மேல் திடீரென சாரல் மழை பெய்ய ஆரம்பித்தது. அதனைத் தொடர்ந்து மழை சற்று வேகமாக பெய்ய ஆரம்பித்தது. இதன் காரணமாக தார் சாலை வழியாக சென்று கொண்டிருந்த இருசக்கர வாகன ஓட்டிகள், பொதுமக்கள் நனைந்து கொண்டு அவதிப்பட்டு சென்றனர். அதேபோல் சாலை ஓரங்களில் போடப்பட்டிருந்த கட்டில் கடைகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் பல்வேறு கடைக்காரர்கள் மழையின் காரணமாக வியாபாரம் செய்ய முடியாமல் அவதிப்பட்டனர். தொடர்ந்து வெயில் வாட்டி வதைத்த நிலையில் 2 நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக வெப்ப சீதோசன நிலை மாறி குளிர்ச்சியான சீதோசன நிலை ஏற்பட்டுள்ளது. மழையின் காரணமாக பயிர்கள் துளிர் விடும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Tags:    

Similar News