உள்ளூர் செய்திகள்

சொந்த வாகனங்களை வாடகைக்கு இயக்கியதாக வாகனங்களுக்கு அபராதம்

Published On 2023-09-01 10:26 GMT   |   Update On 2023-09-01 10:26 GMT
  • 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது.
  • அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது.

ராசிபுரம்:

நாமக்கல் கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் வடக்கு வட்டார போக்குவரத்து அலுவலர் முருகேசன் தலைமையில் ராசிபுரம் மோட்டார் வாகன ஆய்வாளர் நித்யா ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த மாதம் வாகன தணிக்கை செய்தார்.

அப்போது 107 வாக னங்களுக்கு சோதனை அறிக்கை வழங்கப்பட்டது. அதில் 15 சொந்த வாகனங்கள் வாடகை வாகனங்களாக இயக்கப்பட்டது சோதனை யில் உறுதி செய்யப்பட்டது. இதையொட்டி அந்த 15 வாகனங்களும் சிறைபிடிக்கப்பட்டது. சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகை மற்றும் சாலை வரியாக ரூ. 2 லட்சத்து 67 ஆயிரம் வசூலிக்கப்பட்டது. இதர வாகனங்களுக்கு சாலை வரியாக ரூ.65 ஆயிரத்து 300-ம், இணக்க கட்டணமாக ரூ.5 லட்சத்து 52 ஆயிரத்து 500-ம் நிர்ணயிக்கப்பட்டது.

இந்த தகவலை ராசி புரம் மோட்டார் வாகன ஆய்வா ளர் நித்யா தெரிவித்தார்.

Tags:    

Similar News