உள்ளூர் செய்திகள்

போக்குவரத்து விதிமுறைகளை மீறினால் லைசன்ஸ் ரத்து

Published On 2023-06-16 13:03 IST   |   Update On 2023-06-16 13:03:00 IST
  • மோட்டார் வாகன சட்டப்படி, வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாமல் ஓட்டினால் ரூ.1,௦௦௦
  • உரிய டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட எல்லைக்குட்பட்ட வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் மோட்டார் வாகன ஆய்வாளர்கள், போக்குவரத்து போலீசார், போலீஸ் அதிகாரிகள் கொண்ட குழுவினர் பள்ளி மற்றும் கல்லூரிகள் முன்பாகவும், பொது இடங்களிலும் இருசக்கர வாகனங்களில் வரும் மாணவர்கள் குறிப்பாக உரிய டிரைவிங் லைசென்ஸ் இன்றியும், ஹெல்மட் அணி யாமலும், வாகனங்களுக்கு உரிய ஆர்.சி, இன்சூரன்ஸ், புகைச்சான்று போன்ற ஆவணங்கள் இல்லாமலும், டூ வீலரில் 2 பேருக்கும் மேற்பட்டவர்களும் பயணித்து வந்தால், அவர்களை கண்காணித்து, தணிக்கை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் மோட்டார் வாகன சட்டப்படி, வாகனம் ஓட்டுபவர்கள் ஹெல்மட் அணியாமல் ஓட்டினால் ரூ.1,000, டூ வீலரில் 2 நபர்களுக்கு மேல் பயணம் செய்தல் ரூ.1,000, உரிய இன்சூரன்ஸ் சான்று இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.2,000, செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டினால் ரூ.1,000, அதிவேகமாக வாகனம் ஓட்டினால் ரூ.2,000, குடிபோதையில் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, புகைச்சான்று இல்லாமல் வாகனம் ஓட்டினால் ரூ.10,000, 18 வயது பூர்த்தியடையாமல் உரிய டிரைவிங் லைசென்ஸ் இன்றி வாகனம் ஓட்டினால் ரூ.25,000 வீதம் அபராதம் விதிக்கப்பட வேண்டும்.

உரிய டிரைவிங் லைசென்ஸ் இல்லாமலும், குடிபோதையிலும் வாகனம் ஓட்டுதல் மற்றும் சிறுவர்கள் வாகனம் ஓட்டுதல் போன்ற குற்றங்களில் வாகனங்களை பறிமுதல் செய்து கோர்ட்டில் ஒப்படைக்க வேண்டும்.

குடிபோதையில் வாகனம் ஒட்டுதல் மற்றும் உயிரிழப்பு விபத்து ஏற்படுத்துதல் போன்ற குற்றங்களுக்காக டிரைவிங் லைசென்ஸ் 6 மாதங்கள் தற்காலிக தடை மற்றும் அதிவேகமாக வாகனத்தை இயக்குதல், சிவப்பு விளக்கு சிக்னல் மீறுதல், சரக்கு வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் செல்லுதல் போன்ற குற்றங்களுக்காக டிரைவிங் லைசென்ஸ் 3 மாதங்கள் தற்காலிக தடை விதிக்கப்பட வேண்டும்.

எனவே மாணவர்கள், பொதுமக்கள், பெற்றோர்கள் மோட்டார் வாகன சட்டவிதிகளைப் பின்பற்றி மாவட்ட நிர்வாகத் திற்கும், போக்குவரத்து துறைக்கும், காவல் துறைக்கும் விபத்துகளையும், விபத்தினால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்க ஒத்துழைக்க வேண்டும் என்று கலெக்டர் தெரி வித்தார்.

கூட்டத்தில் ஆர்.டி.ஓ, போலீசார் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

Similar News