உள்ளூர் செய்திகள்

நாமகிரிபேட்டையில் ரூ.70 லட்சத்துக்கு மஞ்சள் ஏலம்

Published On 2023-08-09 06:51 GMT   |   Update On 2023-08-09 06:51 GMT
  • நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது.
  • அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர்.

நாமகிரிப்பேட்டையில் உள்ள ராசிபுரம் ஆர்.சி.எம்.எஸ். சங்கத்தின் கிளை வளாகத்தில் மஞ்சள் ஏலம் நடந்தது. இதில் அரியாக்கவுண்டம்பட்டி, நாமகிரிப்பேட்டை, முள்ளுக்குறிச்சி, மெட்டாலா உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் ஏலத்திற்கு மஞ்சளை கொண்டு வந்திருந்தனர். அதேபோல் ஒடுவன்குறிச்சி, ஈரோடு, சேலம்,ஆத்தூர் பகுதிகளை சேர்ந்த வியாபாரிகள் மஞ்சளை ஏலம் எடுப்பதற்காக வந்திருந்தனர். இதில் விரலி ரகம் 550 மூட்டைகளும், உருண்டை ரகம் 250 மூட்டைகளும், பனங்காலி ரகம் 20 மூட்டைகளும் கொண்டுவரப்பட்டிருந்தன. விரலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.8 ஆயிரத்து 42 முதல் அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 899-க்கும், உருண்டை ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.6 ஆயிரத்து 512-க்கும், அதிகபட்சமாக ரூ.14 ஆயிரத்து 602-க்கும், பனங்காலி ரகம் குறைந்தபட்சம் ஒரு குவிண்டால் ரூ.4 ஆயிரத்து 602-க்கும், அதிகப்பட்சமாக ரூ.17 ஆயிரத்து 12-க்கும் ஏலம் விடப்பட்டது. மொத்தம் 820 மஞ்சள் மூட்டைகள் ரூ. 70 லட்சத்துக்கு ஏலம் போனதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கடந்த வாரத்தை விட நேற்று நடந்த மஞ்சள் ஏலத்தில் அதிக விலைக்கு மஞ்சள் விற்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். 

Tags:    

Similar News