உள்ளூர் செய்திகள்

கைது செய்யப்பட்ட அருண்குமார், அவரை கைது செய்த நாமகிரிப்பேட்டை போலீசாரை படத்தில் காணலாம்

மின் ஊழியர் கொலையில் கைதான பெயிண்டர் பரபரப்பு வாக்குமூலம்

Published On 2023-06-08 12:54 IST   |   Update On 2023-06-08 12:54:00 IST
  • சுப்பிரமணி (வயது 70) இவர் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர்.
  • இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள புதுப்பட்டி காமராஜர் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி (வயது 70).

ஓய்வு பெற்ற மின் ஊழியர்

இவர் மின்வாரியத்தில் வயர் மேனாக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவருடைய மனைவி ருக்மணி, கடந்து 7 வருடங்க ளுக்கு முன்பு இறந்து விட்டதால், சுப்பிர மணி தனியாக வீட்டில் வசித்து வந்தார். மேலும் புதுப்பட்டி பகுதியைச் சேர்ந்த மணிகண்டன் என்பவரிடம் சவுண்ட் சிஸ்டம் மற்றும் தண்ணீர் கேன் விநியோகம் செய்யும் பணியை கவனித்து வந்தார்.

கொலை

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் சுப்பிரமணி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து நாமகிப் பேட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசார ணையை தொடங்கினர். இதில், புதுப்பட்டி ஆதிதிரா விடர் பகுதியைச் சேர்ந்த பழனிசாமி மகன் பெயிண்டர் அருண்குமார் (20) என்ப வரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், சுப்ர மணி யத்தை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

வாக்குமூலம்

இதனைத் தொடர்ந்து போலீசார் அருண்குமாரை கைது செய்தனர். அவர் போலீசாரிடம் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள் ளார். அதில், கொலை செய்யப்பட்ட சுப்பிரமணி யன் வீடு அருகே டாஸ்மாக் கடை உள்ளது. இதனால் அங்கு செல்லும் மது பிரி யர்கள் மது பாட்டில்களை வாங்கி சுப்பிரமணியன் வீட்டுக்கு அருகே அமர்ந்து மது குடிப்பது வழக்கமாக இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

பணம் திருட்டு

அதன்படி அருண்குமா ரும் மது வாங்கி சுப்பிர மணியன் வீட்டின் முன் அமர்ந்து குடித்து வந்தார். அப்போது போதையில் அருண்குமார், சுப்பிரமணி யின் வீட்டுக்கு சென்று அவ ரது சட்டை பாக்கெட்டில் இருந்து பணத்தை திருடி வந்துள்ளார். நேற்று முன் தினமும் வழக்கம்போல் அருண்குமார் சுப்பிரமணி யன் வீட்டின் அருகே மது குடித்தார். பின்னர் போதையில் சுப்பிரமணியன் வீட்டுக்கு சென்றார்.

கட்டையால் அடித்து...

சுப்பிரமணி சட்டை பையில் இருந்த பணத்தைத் திருட முயன்றார். அப்போது சுப்பிரமணி கண்விழித்து பார்த்தபோது, அருண்கு மார் பணத்தை திருட முயன்றதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அப்போது இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திர மடைந்த அருண்குமார் அங்கு இருந்த கட்டையால் சுப்பிரமணியத்தை அடித்துக் கொன்றுவிட்டு தப்பி ஓடிவிட்டார்.

அதன் பிறகு போலீசார் விசாரணை நடத்தி தன்னை கைது செய்ததாக வாக்கு மூலத்தில் தெரிவித்துள் ளார். இதனை தொடர்ந்து போலீசார் அருண்குமாரை ராசிபுரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News