உள்ளூர் செய்திகள்

பேக்கரி கடையில் திடீர் 'தீ'

Published On 2023-07-15 15:18 IST   |   Update On 2023-07-15 15:18:00 IST
  • புதுச்சத்திரம் அடுத்த பெருமாள்கோவில்மேட்டில் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது.
  • டீ பாய்லர் மற்றும் கியாஸ் சிலிண்டரில் இன்று திடீரென தீப்பிடித்தது.

நாமக்கல்:

சேலம் - கரூர் தேசிய நெடுஞ்சாலையில் புதுச்சத்திரம் அடுத்த பெருமாள்கோவில்மேட்டில் பஸ் நிறுத்தம் அருகே பேக்கரி ஒன்று செயல்பட்டு வருகிறது. அங்குள்ள டீ பாய்லர் மற்றும் கியாஸ் சிலிண்டரில் இன்று திடீரென தீப்பிடித்தது. அதை கண்டு அதிர்ச்சி அடைந்த வாடிக்கையாளர்கள் பேக்கரியில் இருந்து வெளியே ஓடி வந்தனர். கடை ஊழியர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அவர்கள் துரிதமாக பக்கெட்டுகளில் தண்ணீர் மற்றும் மண்ணை எடுத்து வந்து தீயில் கொட்டி அணைத்தனர். ஊழியர்கள் சாதுர்யமாக செயல்பட்டதால், பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது. இதை கண்ட அப்பகுதி மக்கள் பேக்கரி கடை ஊழியர்களை பாராட்டினர்.

Tags:    

Similar News