உள்ளூர் செய்திகள்

தராசுகளுக்கு உயர்த்தப்பட்டமுத்திரை கட்டணத்தை திரும்ப பெற கோரிக்கை

Published On 2023-05-27 07:58 GMT   |   Update On 2023-05-27 07:58 GMT
  • தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்ப டுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது.
  • சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்டணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது.

நாமக்கல்:

வணிகர் சங்கங்களின் பேரமைப்பின், நாமக்கல் மாவட்டத் தலைவர் ஜெயக்குமார் வெள்ளையன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

தமிழகத்தில் கடந்த, 3 ஆண்டுகளுக்கு முன்பு, கடைகள் மற்றம் வணிக நிறுவனங்களில் பயன்ப டுத்தப்படும், அனைத்து வகையான தராசுகளுக்கும் முத்திரை கட்டணம் பலமடங்கு உயர்த்தப்பட்டது. கொரோனா காலங்களில் மிகவும் சிரமத்திற்கு ஆளாகி, வணிகர்களின் வாழ்வாதாரம் பரிதாப நிலைக்கு சென்று, தற்போது படிப்படியாக மீண்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழக அரசின், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுதுறை, சிறு வணிகர்கள் பயன்படுத்தும் எடை போடும் தராசுகளின் ஆண்டு முத்திரைக் கட்ட ணத்தை, 50 சதவீதம் உயர்த்தி உள்ளது. மேலும், முறையான பயன்பாட்டிற்கான அபராத கட்டணத்தையும் உயர்த்தி அறிவித்துள்ளது.

அதில், குறிப்பாக, 30 கிலோ வரை எடை போடும் தராசுகளின் முத்திரை கட்டணத்தை, ரூ.400-ல் இருந்து, 600 ஆக உயர்த்தி யுள்ளது. அதேபோல், ஒவ்வொரு எடை போடும் தராசுகளின் அளவுகளுக்கு ஏற்ப, அதன் மறு முத்திரைக் கட்டணம் வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.

தற்போதுள்ள நெருக்க டியான பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு, உயர்த்தப்பட்ட முத்திரை கட்டணம் மற்றும் அபராத கட்டண அறிவிப்பை தமிழக அரசு திரும்பப் பெற்று, சிறு குறு வணிகர்களின் வாழ்வா தாரத்தை காத்திட வேண்டும்.

இவ்வாறு அந்த அறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News