உள்ளூர் செய்திகள்

தனியார் பஸ் கண்டக்டர் லைசென்ஸ் ரத்து

Published On 2023-11-24 09:15 GMT   |   Update On 2023-11-24 09:15 GMT
ருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வது தெரியவந்தது.

நாமக்கல்:

நாமக்கல் மாவட்ட கலெக்டர் உமா உத்தரவின் பேரில் நாமக்கல் - திருச்செங்கோடு வழித்தடத்தில் பஸ்கள் திடீர் என ஆய்வு செய்யப்பட்டன.

அப்போது திருச்செங்கோட்டிலிருந்து நாமக்கல்லுக்கு தனியார் பஸ் வேகமாக வந்து கொண்டிருந்தது. இந்த பஸ்சை தடுத்து நிறுத்தி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அதில் அனுமதிக்கப்பட்ட அளவிற்கு மேல் அதிக பயணிகளை ஏற்றிச் செல்வதும், பஸ் படியில் பயணிகளை பயணம் செய்ய அனுமதித்து இருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து அதிரடி நடவடிக்கையாக தனியார் பஸ்சின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும் அந்த பஸ் கண்டக்டரின் லைசென்சை தற்காலிகமாக ரத்து செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. பஸ்களில் அனுமதிக்கப்பட்ட அளவுக்கு மேல் அதிக பயணிகளை ஏற்றி சென்றாலும், படியில் நின்று பயணம் செய்வதற்கு பயணிகளை அனும தித்தாலும் கண்டக்டர்களின் லைசென்ஸ் ரத்து செய்யப்படுவதுடன் பஸ்சின் பர்மிட் மீதும் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என கலெக்டர் உமா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags:    

Similar News