உள்ளூர் செய்திகள்

நாமக்கல்லில்காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி

Published On 2023-10-11 15:00 IST   |   Update On 2023-10-11 15:00:00 IST
  • பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது.
  • நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.

நாமக்கல்:

பெண் குழந்தைகளை பாதுகாக்க வலியுறுத்தி நாமக்கல்லில் விழிப்புணர்வு பேரணி இன்று நடைபெற்றது. நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முன்பு அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் பூர்ணிமா கொடி அசைத்து தொடங்கி வைத்தார். பள்ளி முன்பு தொடங்கி மணிக்கூண்டு, திருச்சி சாலை, டாக்டர் சங்கரன் சாலை, மோகனூர் சாலை வழியாக மீண்டும் பள்ளியை பேரணி வந்தடைந்தது.

பேரணியில் பெண்குழந்தை களை பாதுகாப்போம், அனைத்து பெண் குழந்தைகளுக்கும் கல்வியை உறுதி செய்வோம். பாலின தேர்வு அடிப்படையில் கருவில் பெண் குழந்தைகள் அழிவதை தடுக்க வலியுறுத்தி பேரணியில் ஈடுபட்ட மாணவிகள் கோஷங்கள் எழுப்பினர். இப் பேரணியில் பள்ளி தலைமை ஆசிரியை சிவகாமி, உதவி தலைமை ஆசிரியர் கற்பகம், போக்குவரத்து ஆய்வாளர் ஷாஜஹான், சப்-இன்ஸ்பெக்டர் சதாசிவம், அனைத்து மகளிர் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர்கள் சுமதி, லட்சுமி, பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News