உள்ளூர் செய்திகள்

சாணார்பாளையம் அருகே மோட்டார் சைக்கிள்கள் மோதல்; முதியவர் பலி

Published On 2023-06-01 10:55 IST   |   Update On 2023-06-01 10:55:00 IST
  • நல்லா கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார்.
  • மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த கணேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா, பிலிக்கல்பாளையம் அருகே உள்ள நல்லா கவுண்டம்பா ளையத்தைச் சேர்ந்தவர் கணேசன் (வயது 70). இவர் மீன்பிடித்தொழில் செய்து வந்தார். கணேசன் நேற்று பிலிக்கல்பாளையத்தில் இருந்து தனது மோட்டார் சைக்கிளில் ஜேடர்பாளை யம்-பரமத்தி வேலூர் செல்லும் சாலையில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது சாணார்பாளையம் அருகே வேட்டு வங்காடு பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று கணேசன் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியுள்ளது. இதில் மோட்டார் சைக்கிளுடன் சாலையில் கீழே விழுந்த கணேசனுக்கு தலை மற்றும் பல்வேறு பகுதிகளில் பலத்த காயம் ஏற்பட்டது.

அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடிவந்து ஆம்புலன்ஸ் மூலம் படு காயம் அடைந்த கணேசனை யும் பின்னால் வந்து மோதி விபத்தை ஏற்படுத்திய வரையும் காப்பாற்றி பரமத்தி வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதில் கணேசன் மேல் சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கணேசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் மீது மோதி படுகாயம் அடைந்த சாணார்பாளையத்தை சேர்ந்த சக்திவேல் என்பவ ரது மகன் அபிமன்யு (23) வேலூர் அரசு மருத்துவ மனையில் இருந்து மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்து வமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். விபத்து குறித்து பரமத்தி வேலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News