கபிலர்மலை பகுதியில் விவசாயத் தோட்டத்தில் மயில்கள் தொல்லை
- நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசாயிகள் பயிர் செய்துள்ளனர்.
- தானியங்களை கொத்தி நாசப்படுத்தி வருகிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஆனங்கூர், அய்யம்பாளை யம், சின்ன மருதூர், கண்டி பாளையம், கபிலர்மலை, பெரிய சோளிபாளையம், சின்ன சோளிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நெல், சோளம், மக்காச்சோளம், கேழ்வரகு, கம்பு உள்ளிட்ட பல்வேறு தானிய வகைகளை விவசா யிகள் பயிர் செய்துள்ளனர்.
இந்நிலையில் இந்த பகுதிகளில் வசிக்கும் மயில்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இவை விவசாயிகள் பயிர் செய்துள்ள பகுதிகளுக்கு சென்று, தானியங்களை கொத்தி நாசப்படுத்தி வரு கிறது. இதனால் விவசாயிகள் மிகவும் பாதிப்படைந்து வருகின்றனர்.
விவசாயத்தில் தொடர்ந்து நஷ்டம் ஏற்பட்டு வரும் நிலையில், மயில்களின் தொல்லையால் மேலும் பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே வனத்து றையினர் இப்பகுதியில் உள்ள மயில்களை பிடித்து வனப்பகுதிகளுக்கு கொண்டு சென்று விட்டு விவசாயிகளை காப்பாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.