உள்ளூர் செய்திகள்

விவசாயிகளுக்கு ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு பயிற்சி

Published On 2023-08-15 15:27 IST   |   Update On 2023-08-15 15:27:00 IST
  • “ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு” என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
  • பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும்.

நாமக்கல்:

நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் வருகிற 21-ந்தேதி ( திங்கட்கிழமை) "ஒருங்கிணைந்த பண்ணை முறையில் மீன் வளர்ப்பு" என்ற தலைப்பில் இலவச பயிற்சி நடைபெற உள்ளது. இதில் மீன் பண்ணை அமைத்தல், மீன் குஞ்சுகளை தேர்வு செய்தல், உற்பத்தி திறனை அதிகரிக்க வழிமுறைகள் பற்றியும், புதிய தொழில்நுட்ப முறையில் மீன் வளர்ப்பு பற்றியும் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. மேலும் மத்திய, மாநில அரசாங்கத்தின் மீன் வளர்ப்புக்கான மானியம் பற்றியும் எடுத்துரைபடும்.இதில் விவசாயிகள், பண்ணையாளர்கள், ஊரக மகளிர், இளைஞர்கள், கல்லூரி மாணவ- மாணவிகள் மற்றும் ஆர்வமுள்ளவர்கள் கலந்து கொள்ளலாம். இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆர்வம் உள்ள விவசாயிகள் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும் பயிற்சிக்கு வரும் விவசாயிகள் தங்களுடைய ஆதார் எண்னை கண்டிப்பாக கொண்டு வரவேண்டும். இந்த தகவலை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தின் நாமக்கல் வேளாண்மை அறிவியல் நிலையம் ெதரிவித்துள்ளது.

Tags:    

Similar News