போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் படத்தில் காணலாம்.
பொன்னேரிபட்டி கிராமத்தில் கான்கிரீட் சாலை அமைப்பதை கண்டித்து போராட்டம்
- மோகனூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பொன்னேரிபட்டி கிராமத்தில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
- இந்த மைதான பகுதியின் குறுக்கே அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் மோகனூர் ஊராட்சி ஒன்றி யத்திற்கு உட்பட்ட பொன்னேரிபட்டி கிரா மத்தில் 100- க்கும் மேற்பட்ட வீடுகளில் பொதுமக்கள் வசித்து வரு கின்றனர். இக்கிராமத்தில் செயல்பட்டு வந்த ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி கடந்த சில ஆண்டுகளாக செயல்ப டாமல் உள்ளது.
தொடக்கப்பள்ளி முன்பு உள்ள விளையாட்டு மைதா னம் தற்பொழுது பள்ளி செயல்படாமல் உள்ளதால் தற்பொழுது குழந்தைகள் விளையாட்டு மைதானமாக உள்ளது. இந்த மைதான பகுதியின் குறுக்கே அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 கீழ் ரூ.4 லட்சத்து 17 ஆயிரம் மதிப்பில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டு வருகிறது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பா.ஜ.க மாவட்ட துணைத் தலைவர் வடி வேல், பாரதீய கிசான் மாவட்ட செயலாளர் பால சுப்பிரமணி ஆகியோர் தலைமையில் நேற்று பொது மக்கள் சிமெண்ட் சாலை அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) இந்திராணி மற்றும் போலீசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர்.அதனை தொடர்ந்து அங்கு வந்த காளிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் பொன்னுசாமி மற்றும் பொதுமக்கள் சிமெண்ட் சாலை மாவட்ட நிர்வாக அனுமதியுடன் நடைபெற்று வருவதாக தெரிவித்தனர்.
இதனிடையே சிமெண்ட் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் மற்றும் ஆதரவு தெரிவித்தவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இன்ஸ்பெக்டர் இந்திராணி இருதரப்பினரி டமும் பேச்சு வார்த்தை நடத்தியதை தொடர்ந்து அங்கிருந்த வர்கள் கலைந்து சென்றனர்.