குடும்ப அட்டை திருத்த சிறப்பு முகாம்
- பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
- முகாமிற்கு பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார்.
பரமத்திவேலூர்:
பரமத்தி வேலூர் தாசில்தார் அலுவலகத்தில் உள்ள வட்ட வழங்கல் அலுவலகத்தில் பொது வினியோகத் திட்டத்தின் மூலம் பெயர் சேர்த்தல், பெயர் நீக்கம், பெயர் திருத்தம், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம், புதிய குடும்ப அட்டை கோருதல், செல்போன் எண் பதிவு மற்றும் பொது விநியோக கடைகளின் செயல்பாடுகள் குறித்த புகார்களை நுகர்வோர் பாது காப்புச் சட்டம் 2019-ன் படி மேற்கொள்ள பொது விநியோகத் திட்டத்தின் சேவைகளை அனைத்து தரப்பு மக்களுக்கும் வழங்கவும், குடும்ப அட்டையில் உள்ள குறைகளை திருத்தம் செய்யும் பொருட்டு குறைதீர்க்கும் சிறப்பு முகாம் நடைபெற்றது.
முகாமிற்கு பரமத்தி வேலூர் வட்ட வழங்கல் அலுவலர் சித்ரா தலைமை வகித்தார். இந்த சிறப்பு முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட 18 மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காணப்பட்டது. முகா மில் தனி வருவாய் ஆய்வா ளர் பூபாலன் மற்றும் முதல் நிலை வருவாய் ஆய்வாளர் சசிகலா ஆகியோர் உடன் இருந்தனர்.