ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் தங்கமணி, முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரோஜா உள்ளிட்ட ஏராளமான அ.தி.மு.க.வினர் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்
- காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
- தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை தாங்கினார்.
திருச்செங்கோடு:
காய்கறி மற்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைவாசி உயர்வை தி.மு.க. அரசு கட்டுப்படுத்த தவறியதாக கூறி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
நாமக்கல் மாவட்ட அ.தி.மு.க சார்பில் திருச்செங்கோடு அண்ணா சிலை அருகே தி.மு.க. அரசை கண்டித்து நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான தங்கமணி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. பொன்.சரஸ்வதி முன்னிலை வகித்தார்.
இதில் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் வக்கீல் சந்திர சேகர், திருச்செங்கோடு அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் அணிமூர் மோகன், சந்திர சேகர், மாவட்ட அண்ணா தொழிற்சங்க செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணை தலைவர் முருகேசன், திருச் செங்கோடு நகர செயலாளர் அங்கமுத்து மற்றும் கட்சி தொண்டர்கள், பொதுமக்கள் பங்கேற்று தி.மு.க. அரசை கண்டித்து பல்ேவறு கோஷங்கள் எழுப்பினர்.