உள்ளூர் செய்திகள்

இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை கலெக்டர் உமா ஆய்வு செய்த காட்சி.

நாமக்கல் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை கலெக்டர் ஆய்வு

Published On 2023-06-14 14:12 IST   |   Update On 2023-06-14 14:12:00 IST
  • பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உமா அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.
  • நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகில் செயல்பட்டு வரும் நைனாமலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் நைனாமலை உழவர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

நாமக்கல்:

நாமக்கல் பூ மாலை வணிக வளாகத்தில் செயல்பட்டு வரும் மகளிர் வாழ்வாதார சேவை மையத்தினை பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து மாவட்ட கலெக்டர் உமா அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

இதனைத் தொடர்ந்து, நாமக்கல் மாவட்டம், புதன்சந்தை அருகில் செயல்பட்டு வரும் நைனாமலை உற்பத்தியாளர் நிறுவனத்தின் நைனாமலை உழவர் அங்காடியில் மாவட்ட கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

ராசிபுரம் ஒன்றியம், சிங்களாந்தபுரம் ஊராட்சியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி புதியதாக அமைக்கப்பட்டுள்ளதை நேரில் பார்வையிட்டு, இதன் மூலம் வழங்கப்படும் குடிநீர் இணைப்புகளின் எண்ணிக்கை, பயன்பெறும் குடியிருப்புகள் எண்ணிக்கை உள்ளிட்ட விவரங்களை வட்டார வளர்ச்சி அலுவ லரிடம் மாவட்ட கலெக்டர் கேட்டறிந்தார். மேலும், பொதுமக்களிடம் குடிநீர் முறையாக விநியோகிக் கப்பட்டு வருகின்றதா என கேட்டறிந்தார். மேலும், ராசிபுரம் வட்டம், பெருமா கவுண்டம்பாளையம், தொ.ஜேடர்பாளையம், காக்காவேரி ஆகிய இடங்களில் ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின் மூலம் பட்டா வழங்கப்பட்டு, இணையவழி பட்டா வழங்குவதற்காக வரன்முறைபடுத்தும் பணிகள் நடைபெற்று வருவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின் போது, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் குமார், உதவி செயற்பொறியாளர் கணேஷ் பெருமாள், வட்டார வளர்ச்சி அலுவலர் தனம், சிங்களாந்தபுரம் ஊராட்சி மன்றத்தலைவர் புஷ்பா ஆகியோர் உட்பட வருவாய் துறை அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News