உள்ளூர் செய்திகள்

மூதாட்டி ஒருவருக்கு கலெக்டர் டாக்டர் உமா நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம்.

இருக்கூர் மக்கள் தொடர்பு திட்ட முகாமில்303 பேருக்கு ரூ4.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்

Published On 2023-07-13 12:35 IST   |   Update On 2023-07-13 12:35:00 IST
  • பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது.
  • இம்முகாமிற்கு பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. சேகர் முன்னிலை வகித்தார்.

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் தாலுகா இருக்கூர் கிராமத்தில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இம்முகாமிற்கு பரமத்திவேலூர் எம்.எல்.ஏ. சேகர் முன்னிலை வகித்தார். முகாமிற்கு நாமக்கல் மாவட்ட கலெக்டர் டாக்டர் உமா தலைமை தாங்கி 303 பயனாளிகளுக்கு ரூ4.33 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து ரூ.1.19 இலட்சம் மதிப்பீட்டில் பஞ்சபாளையம் புது காலனியில் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.4.79 லட்சம் மதிப்பீட்டில் இருக்கூர் கிராமம், வடக்கு செல்லப்பம்பாளையம் குமரன் நகரில் சாலை அமைக்கும் பணிக்கும், ரூ.23.96 லட்சம் மதிப்பிட்டில் வலசுபாளையம் கிராமத்தில் மண்சாலையை ஒரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணிக்கும், ரூ.23.96 இலட்சம் மதிப் பிட்டில் வலசுப்பாளை யத்தில் மண்சாலையை ஓரடுக்கு கப்பி சாலையாக அமைக்கும் பணிக்கும் மொத்தம் ரூ.53.90 லட்சம் மதிப்பிட்டில் 4 புதிய திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும் கலெக்டர் டாக்டர் உமா வழங்கினார்.

முன்னதாக வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டு வளர்ச்சி துறை, சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறை, முதல்- அமைச்சர் மற்றும் பிரதமரின் மருத்துவ அடையாள அட்டைகள் வழங்கும் முகாம் உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளதையும் கலெக்டர் நேரில் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் கபிலர்மலை யூனியன் சேர்மன் ஜே.பி ரவி, கபிலக்குறிச்சி ஊராட்சி மன்றத்தலைவர் ஜானகி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பிரபாகரன், மகளிர் திட்ட இயக்குநர் பிரியா, மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் ரமேஷ், மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குநர் (பொறுப்பு) நடராஜன், வேளாண்மைத்துறை (இணை இயக்குநர்) துரை சாமி, மாவட்ட மேலாளர் (தாட்கோ) ராமசாமி, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சதீஸ்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News