பரமத்திவேலூர் அருகே குடோன், கூரை வீட்டில் தீ விபத்து
- பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலையில் எசன்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வெங்கடசாமி (வயது 40).
- கடைக்கு விற்பனைக்கு தேவையான பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் பல்வேறு வகையான எசன்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் குடோனில் தீ திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் திருவள்ளுவர் சாலையில் எசன்ஸ் கடை வைத்து நடத்தி வருபவர் வெங்கடசாமி (வயது 40). இவர் எதிரே உள்ள ஒரு குடோனில் கடைக்கு விற்பனைக்கு தேவையான பிளாஸ்டிக் கப்புகள், பிளாஸ்டிக் பைகள் பல்வேறு வகையான எசன்ஸ்கள் உள்ளிட்ட ஏராளமான பொருட்களை அடுக்கி வைத்திருந்தார். இந்நிலையில் குடோனில் தீ திடீரென தீப்பிடித்து மளமளவென எரிய ஆரம்பித்தது. அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை.
அதேபோல் பொத்தனூர் தேவராய சமுத்திரம் பகுதியை சேர்ந்தவர் கார்த்திகேயன் (50). இவர் குடும்பத்தினருடன் கூரை வீட்டில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில் அந்தப் பகுதியில் இளைஞர்கள் பட்டாசுகள் ெவடித்துக் கொண்டி ருந்தனர். அப்போது வெடித்த பட்டாசு ஒன்று தீயுடன் கார்த்திகேயனுக்கு சொந்தமான கூரை வீட்டின் மீது விழுந்தது. இதில் கூரைவீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.
இது குறித்து தகவல் அறிந்ததும் வேலாயு தம்பாளையம் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் சம்பந்தப்பட்ட பகுதிக்கு விரைந்து சென்று தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அனைத்து கட்டுப்படுத்தி தீ பக்கத்து வீடுகளுக்கும் பரவாமல் தடுத்தனர். இதனால் பெரும் தீ விபத்து தவிர்க்கப்பட்டது.