உள்ளூர் செய்திகள்

கஞ்சா விற்பனை செய்த சுப்பியா மற்றும் வட மாநிலத்தைச் சேர்ந்த சங்கர் சிங் ஆகியோரை படத்தில் காணலாம்.

கபிலர்மலை அருகே கஞ்சா விற்ற பெண் உள்பட 2 பேர் கைது

Published On 2023-11-05 08:11 GMT   |   Update On 2023-11-05 08:11 GMT
  • கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதன் அடிப்படையில் பரமத்தி சப் -இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் இருக்கூரில் இருந்து வேலூர் செல்லும் சாலையில் உள்ள அக்பர் உசேன் என்பவரது வீட்டில் உள்ள கோழி கொட்டகையில் சோதனை மேற்கொண்டனர். அதில் அங்கு ஒரு பையுடன் இருந்த பெண் உள்பட 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

ரெயிலில்...

விசாரணையில் இருக்கூரை சேர்ந்த அக்பர் உசேன் என்பவரது மனைவி சுப்பியா(40) மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த திலோக்சிங் என்பவரது மகன் சங்கர் சிங் (22) ஆகியோர் என்பது தெரியவந்தது.

மேலும் சங்கர் சிங், சுப்பியா மற்றும் அவரது கணவர் அக்பர் உசேன் என்கிற ராஜு ஆகியோர் ஒடிசா மாநிலத்திற்கு சென்று பலமுறை மொத்தமாக கஞ்சாவை ெரயில் மூலம் கடத்தி வந்து கபிலர்மலை பகுதியில் தொடர்ந்து விற்பனை செய்து வந்தது தெரியவந்தது.

கைது

சுப்பியா மற்றும் சங்கர் சிங் ஆகியோரிடமிருந்து காய்ந்த விதைகள், இலைகள், காய்கள், பூ மற்றும் தன்டுகளுடன் கூடிய உலர்ந்த 6 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதையடுத்து பரமத்தி குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு நீதிபதியின் உத்தரவின் பேரில் 2 பேரும் கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Tags:    

Similar News