உள்ளூர் செய்திகள்

குண்டும், குழியுமாக மாறிய நல்லாம்பாளையம் சாலை

Published On 2022-12-09 14:35 IST   |   Update On 2022-12-09 14:35:00 IST
  • இந்த சாலையால் பொதுமக்கள் கடும் அவதியடைந்து வருகிறனர்.
  • 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்காக 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.

கோவை,

கோவை கணபதி அருகே நலம்பாளையம் சாலை உள்ளது. இங்கு 24 மணிநேர குடிநீர் திட்டத்துக்காக 1 கிலோ மீட்டர் தூரத்துக்கு குடிநீர் குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது.

குழாய் பதிக்கும் பணிகள் கடந்த ஒரு ஆண்டுகளாக நடந்தது. குழாய் பதிக்கும் பணி பெரும்பாலும் முடிந்துவிட்டது. இதேபோன்று பாதாள சாக்கடைக்காகவும் குழாய் பதிக்கப்பட்டது. அகலம் குறைவான இந்த சாலையில் இருபுறமும் பள்ளம் தோண்டியதால் சாலை முழுவதுமே மிகவும் சேதம் அடைந்து போனது.

இதனால் அந்த சாலை முழுவதும் குண்டும், குழியுமாக மாறி புழுதிகாற்று பரவி அருகே உள்ள கடைகள் மற்றும் குடியிருப்புகளில் தூசி பரவி வருகிறது. மழை பெய்தால் சேறும் சகதியுமாக மாறி வருகிறது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்ற செல்லதுரை என்பவர் பள்ளத்தில் விழுந்து கால் முறிந்து படுகாயம் அடைந்தார். சாலையில் கிளம்பும் தூசியினால் சுவாச கோளாறு, இருமல் உள்ளிட்ட பாதிப்புகளால் அடிக்கடி பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த சாலையில் தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. பாலம் வேலை நடப்பதால் வாகனங்களும் திருப்பி விடப்படுகிறது. மேலும் நலம்பாளையம் சாலை வழியாகதான் கண்ணப்பநகர், சங்கனூர் ரோட்டுக்கு செல்ல வேண்டும்.

இங்கு நூற்றுக்கணக்காக தொழிற்சாலைகள் உள்ளது. இங்கு வேலைக்கு செல்பவர்கள் சரியான நேரத்திற்கு செல்ல முடியாமல் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே அந்த சாலையை சீரமைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

Tags:    

Similar News