உள்ளூர் செய்திகள்
குண்டர் சட்டத்தில் கைதானவர்கள்.
கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் குண்டர் சட்டத்தில் கைது
தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
நாகப்பட்டினம்:
நாகை மாவட்டம் கீழ்வேளூர் பகுதிகளில் பல்வேறு வீடுகளில் சமீபத்தில் கொள்ளை சம்பவங்கள் அரங்கேறின இச்சம்பவம் குறித்து தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டு கொள்ளையர்களை பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர்.
அதனடிப்படையில் கீழ்வேளூர் அருகே கூட்டுக்கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த தமிழ்மாறன், தனராஜ், ஹரிஹரன், குருபாலன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். இதையடுத்து தொடர் கொள்ளை மற்றும் குற்றச் செயலில் ஈடுபட்ட நால்வரையும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய உத்தரவிட்டார். அதன்படி குற்றவாளிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.