உள்ளூர் செய்திகள்

பருவநிலை மாற்றத்தால் திண்டிவனத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சல்:15 பேருக்கு தீவிர சிகிச்சை

Published On 2023-11-01 14:13 IST   |   Update On 2023-11-01 14:13:00 IST
  • அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென அரசு சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது.
  • நோயாளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

விழுப்புரம்:

திண்டிவனத்தில் கடந்த இரு தினங்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் குளிர்ந்த காற்று வீசி வருகிறது. ஒரு சில இடங்களில் பனிப்பொழிவும் உள்ளது. இதனால் திண்டிவனம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் வசிக்கும் பெரும்பா லானோருக்கு திடீர் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டுமென அரசு சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து அறிவுறுத்தப்படுகிறது. இதனால் திண்டிவனம் பகுதியில் காய்ச்சல் ஏற்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திண்டிவனம் அரசு மருத்துவமனையில் குவிந்துள்ளனர். இதில் தீவிர காய்ச்சல் உள்ள 15 பேர் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

இந்த நோயாளிகளுக்கு மருந்து, மாத்திரைகளுடன் நிலவேம்பு கசாயம், உப்பு கரைசல், கபாசுர குடிநீர் போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. மேலும், காய்ச்சலினால் பாதிக்கப்பட்டுள்ள நோயா ளிகளை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.திண்டிவனம் அரசு பொது மருத்துவமனையின் பழைய கட்டிடங்களை இடித்துவிட்டு, புதிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகிறது. இதனால் மருத்துவ மனையில் குறி ப்பிட்ட எண்ணிக்கையிலான நோயாளிகளை மட்டுமே அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். எனவே, பொதுமக்கள் நலன் கருதி மருத்துவமனை கட்டும் பணியினை துரித ப்படுத்த வேண்டுமென நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags:    

Similar News