உள்ளூர் செய்திகள்

மர்ம நோய்களால் தாக்கப்பட்ட தென்னை மரங்களை படத்தில் காணலாம்

ராதாபுரம் பகுதிகளில் தென்னை மரங்களை தாக்கும் மர்ம நோய் - விவசாயிகள் வேதனை

Published On 2022-12-10 09:34 GMT   |   Update On 2022-12-10 09:34 GMT
  • ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர்.
  • தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

பணகுடி:

ராதாபுரம் தாலுகா பகுதிகளில் விவசாயிகள் முக்கிய தொழிலாக தென்னை மரம் வளர்த்து வருகின்றனர். தற்போது தென்னை மரங்களுக்கு நோய் தாக்கம் அதிகரித்து இருப்பதால் அதிக அளவில் பாதிக்கப்பட்டு இருப்பதாக விவசாயிகள் கூறுகின்றனர். தென்னை மரங்கள் காய்ப்புக்கு வர வேண்டிய நேரத்தில் மர்ம நோய்கள் தாக்குவதினால் தென்னை மரங்கள் கருகியும், மஞ்சள் நிறத்தில் மாறியும் வருவதாகவும் கூறுகின்றனர்.

இதற்கு பல்வேறு மருந்துகள் தெளித்தும் நோய்கள் குணமாவதில்லை. இது குறித்து வேளாண்மைத்துறை அதிகாரிகளிடம் கூறியும் அதற்கான விளக்கம் அளிக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் இந்த மர்ம நோய்களுக்கு ராதாபுரம் பகுதிகளில் உள்ள பல தென்னைமர விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கின்றனர். சம்பந்தப்பட்ட வேளாண்மை துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட தென்னை மரங்களை பார்வையிட்டு அதற்கான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தால் தென்னை மரங்களை பாதுகாக்க முடியும் என்று விவசாயிகள் கூறுகின்றனர்.

Tags:    

Similar News