உள்ளூர் செய்திகள்

தருமபுரியில் மாயமான 2 பள்ளி மாணவர்கள் மீட்பு

Published On 2023-04-07 15:27 IST   |   Update On 2023-04-07 15:27:00 IST
  • நேற்று வியாழக்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக சென்றவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி உள்ளனர்.
  • இருவரை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் இருவரும் தருமபுரியில் மாயமான பள்ளி மாணவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

பென்னாகரம்,

தருமபுரி மாவட்ட நகர எல்லைக்கு உட்பட்ட அண்ணா நகர் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன், இதே பகுதியை சேர்ந்த வயது 12 சிறுவன். நண்பர்களான இருவரும் தருமபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தனர்.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை காலை பள்ளிக்கு செல்வதாக சென்றவர்கள் பள்ளிக்கு செல்லாமல் சுற்றி உள்ளனர். மாலையில் மாணவர்கள் இருவரும் வீட்டிற்கு வராத நிலையில் பெற்றோர் பள்ளிக்கு சென்று விசாரித்த போது பள்ளிக்கு வரவில்லை என்பது தெரியவந்தது.

இது குறித்து மாணவர்களின் பெற்றோர் தருமபுரி நகர் காவல் நிலையத்தில் தகவல் தெரிவித்தனர். பள்ளி மாணவர்கள் மாயமானது குறித்து தருமபுரி நகர காவல் துறை சார்பில் அனைத்து காவல் நிலையங்களுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து பென்னாகரம் காவல் துணை கண்காணிப்பாளர் இமயவரம்பன் உத்திரவின் பேரில் காவல் உதவி ஆய்வாளர் சென்றாய பெருமாள், பென்னாகரம் தற்காலிக பேருந்து நிலைய அருகில் பணியில் இருந்தார்.

அப்போது அவ்வழியாக வந்த பள்ளி மாணவர்கள் இருவரை அழைத்து விசாரித்த பொழுது அவர்கள் இருவரும் தருமபுரியில் மாயமான பள்ளி மாணவர்கள் 2 பேர் என்பது தெரியவந்தது.

இது குறித்து பென்னாகரம் காவல் நிலையம் சார்பில் தருமபுரி நகர காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் தருமபுரி நகர போலீசார் பள்ளி மாணவர்களின் பெற்றோருடன் பென்னாகரம் வந்தனர்.

அவர்களிடம் பள்ளி மாணவர்கள் இருவரும் ஒப்படைக்கப்பட்டனர். முன்னதாக பள்ளி மாணவர்களின் பெற்றோர் வரும் வரை காவல் உதவி ஆய்வாளர்கள் சென்றாய பெருமாள், சிங்காரம் ஆகியோர் பள்ளி மாணவ ர்களுக்கு உணவு வாங்கி கொடுத்து உடன் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Tags:    

Similar News