உள்ளூர் செய்திகள்

கடையம் அருகே முப்புடாதி அம்மன் கோவில் கொடை விழா

Published On 2023-09-13 09:27 GMT   |   Update On 2023-09-13 09:27 GMT
  • விழாவை முன்னிட்டு தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர்.
  • இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது.

கடையம்:

கடையம் அருகே உள்ள பாப்பாங்குளம்- மயிலப்பபுரம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற முப்புடாதி அம்மன் கோவில் ஆவணி கொடை விழா கடந்த 5-ந்தேதி கால் நாட்டுதலுடன் தொடங்கியது. தினமும் முளைப்பாரி கும்மி அடித்து பெண்கள் சாமி தரிசனம் செய்து வந்தனர். நேற்று மதியம் சிறப்பு பூஜையும், அன்னதானமும் நடைபெற்றது. மாலையில் பால்குட ஊர்வலமும், பெண்கள் முளைப்பாரி எடுத்து கும்மியடித்தும் சாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இன்று காலையில் அம்மனுக்கு நேர்த்தி கடனாக சிறுவர்கள் பூ பெட்டி எடுக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜையுடன் கிடா வெட்டும் நிகழ்வும், மஞ்சள் பானையில் நீராடும் நிகழ்ச்சி நடை பெற்றது. விழா விற்கான ஏற்பாடு களை மயிலப்பபுரம் கிராமத்தை சேர்ந்த விழாக் கமிட்டியினர் செய்தி ருந்தனர்.

Tags:    

Similar News