ஆரம்ப சுகாதார நிலையத்தை ஆய்வு செய்த விஜய் வசந்த் எம்.பி.
அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.60 லட்சம் மதிப்பில் தனி பிரசவ வார்டு அறை - எம்.பி. விஜய் வசந்த் தகவல்
- அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கன்னியாகுமரி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார் .
- அந்த நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறைசார்ந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்
தென்தாமரைகுளம்:
அகஸ்தீஸ்வரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நேற்று கன்னியாகுமரி பாராளுமன்ற தொகுதி எம்.பி. விஜய் வசந்த் ஆய்வு செய்தார் .
அப்போது அவரிடம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து துறை சார்ந்த அதிகாரிகள் கோரிக்கை விடுத்தனர்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த எம்.பி.,விஜய் வசந்த் கூறியதாவது;
அகஸ்தீஸ்வரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தனி பிரசவ வார்டு அறை அமைக்க ரூ.60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. விரைவில் இந்த பணி தொடங்கப்படும்.
அதேபோல், தற்போதுள்ள பிரசவ வார்டில் மேற்கூரை சேதமடைந்துள்ளது. இதனை சரி செய்யவும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறேன் என தெரிவித்துள்ளார் .
இந்த ஆய்வின்போது அகஸ்தீஸ்வரம் வட்டார மருத்துவ அலுவலர் சீதா, முடயியல் இயக்குனர் கனி, காங்கிரஸ் மாநிலச் செயலாளர் வக்கீல் சீனிவாசன், அகஸ்தீஸ்வரம் பேரூர் தலைவர் கிங்சிலின், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னம்பெருமாள், நிர்வாகிகள் டேனியல், ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் ஆகியோர் உடனிருந்தனர்.