உள்ளூர் செய்திகள்
ஒகேனக்கல் சாலையில் உலா வந்த ஒற்றையானையை படத்தில் காணலாம்.
ஒகேனக்கல் சாலையில் உலா வந்த காட்டு யானையால் வாகன ஓட்டிகள் அச்சம்
- சாலைகளில் தினம் தோறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்துவதற்காக செல்கின்றன.
- அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
ஒகேனக்கல்,
கோடை காலம் தொடங்கியிலிருந்து வனப்பகுதியில் வாழும் ஏராளமான வன உயிரினங்கள் உணவு மற்றும் தண்ணீரை தேடி வனப்பகுதியை விட்டு வெளியேறி கிராமங்களிலும் வனப்பகுதிகளை ஒட்டி உள்ள சாலைகளிலும் வலம் வருகின்றன.
இந்த நிலையில் ஒகேனக்கல் வனப்பகுதியை ஒட்டியுள்ள சாலைகளில் தினம் தோறும் காட்டு யானைகள் கூட்டம் கூட்டமாக தண்ணீர் அருந்துவதற்காக செல்கின்றன. இதனிடையே பண்ணப்பட்டி காடு என்ற பகுதியில் வெளியேறிய ஒற்றை காட்டு யானை, சாலைகளில் நடந்து செல்வதால் அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்தும் செல்பி எடுத்துக்கொள்கின்றனர்.
இந்த ஆண் யானையை பார்த்து செல்லும் சுற்றுலா பயணிகள் வனப்பகுதிகளை கடந்து செல்வதற்கு அச்சத்துடன் செல்லும் சூழல் ஏற்படுகின்றன.