உள்ளூர் செய்திகள்

செஞ்சி அருகே ஸ்கூட்டி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: 5 பேர் படுகாயம்

Published On 2022-06-13 14:56 IST   |   Update On 2022-06-13 17:53:00 IST
  • பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.
  • அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

விழுப்புரம்:

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே கவரை கடகம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் குப்புசாமி (வயது 60). இவர் தனது உறவினர் வேலுவின் குழந்தைகளான நேதாஜி (14), சகுந்தலாதேவி (12) ஆகியோரை தனது ஸ்கூட்டியில் உட்கார வைத்துக் கொண்டு அப்பம்பட்டில் இருந்து கவரை நோக்கி சென்று கொண்டிருந்தார். அவர் கவரை அருகே சென்று கொண்டிருந்தபோது பின்னால் வந்த ஒரு மோட்டார் சைக்கிள் ஸ்கூட்டி மீது பயங்கரமாக மோதியது.

இதில் ஸ்கூட்டியில் சென்ற மேற்படி 3 பேரும் மற்றும் மோட்டார் சைக்கிளில் சென்ற மாவட்டம் பாடி கிராமத்தைச் சேர்ந்த பாலு, சத்தியசீலன் ஆகியோர் பலத்த காயமடைந்தனர். காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். இதில் தலை மற்றும் முதுகுப் பகுதியில் பலத்த காயமடைந்த குப்புசாமி மேல் சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர், மற்றவர்களுக்கு செஞ்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் குறித்து அனந்தபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Tags:    

Similar News