உள்ளூர் செய்திகள்
செஞ்சியில் டிராக்டர் மீது மோட்டார் சைக்கிள் மோதி வாலிபர் பலி
- வடவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு செஞ்சியிலிருந்து வடவானூர் நோக்கி வந்தனர்.
- அப்போது திண்டிவனம் சாலை நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது அதற்கு முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது.
விழுப்புரம்:
செஞ்சி அருகே வடவானூர் கிராமத்தை சேர்ந்தவர் வடிவேலு (வயது 35). அதே ஊரை சேர்ந்த ராமச்சந்திரன் என்பவருடன் மோட்டார் சைக்கிளில் சம்பவத்தன்று இரவு செஞ்சியிலிருந்து வடவானூர் நோக்கி வந்தனர். அப்போது திண்டிவனம் சாலை நீதிமன்ற வளாகம் அருகே மோட்டார் சைக்கிள் வந்தபோது அதற்கு முன்னாள் சென்ற டிராக்டர் டிப்பர் மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த வடிவேலு மற்றும் ராமச்சந்திரனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக செஞ்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதில் பலத்த காயம் அடைந்த வடிவேலு மேல்சிகிச்சைக்காக புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி வடிவேலு பரிதாபமாக இறந்தார்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.