உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை அரசு மருத்துவமனையில் எம்.எல்.ஏ. திடீர் ஆய்வு

Published On 2023-11-18 08:42 GMT   |   Update On 2023-11-18 08:42 GMT
  • ஆய்வின்போது உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள், குறைகளை கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. கேட்டறிந்தார்.
  • கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ.விடம் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன் கோரிக்கை விடுத்தார்.

செங்கோட்டை:

செங்கோட்டையில் உள்ள அரசு பொது மருத்துவமனையில் கடையநல்லூர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கிருஷ்ண முரளி திடீர் ஆய்வு செய்தார். அப்போது அங்கு சிகிச்சை பெறும் உள் நோயாளிகளுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் மற்றும் குறைகளை கேட்டறிந்தார்.

இதனைத்தொடர்ந்து மருத்துவமனையில் உள்ள பிரசவ வார்டு, பெண்கள் வார்டு மற்றும் குழந்தைகள் வார்டுகளில் அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணனிடம் அவர் கேட்டறிந்தார். அப்போது செங்கோட்டை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜேஷ் கண்ணன், கிருஷ்ண முரளி எம்.எல்.ஏ. விடம் செங்கோட்டை அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளும் நோயாளிகளுக்கு மயக்க மருந்து கொடுப்பதற்கு பாய்ல்ஸ் அப்பாரட்டஸ் என்ற கருவியும், ஸ்கேன் எடுப்பதற்கு அல்ட்ரா சோனோகிராம் அப்டாமன் என்ற கருவியும் அவசரமாக தேவை ப்படுவதால் ரூ.5 லட்சம் மதிப்பில் 2 கருவிகளையும் வாங்கித் தருமாறு கோரிக்கை விடுத்தார்.

அந்த கருவிகள் வாங்குவதற்கு நடவடி க்கை எடுப்பதாக கிருஷ்ணமுரளி எம்.எல்.ஏ. உறுதி அளித்தார். ஆய்வின் போது, தென்காசி வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் பொய்கை மாரியப்பன், நகர செயலாளர் கணேசன் மற்றும் அரசு மருத்துவர்கள், மருத்துவமனை பணியாளா்கள் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News