உள்ளூர் செய்திகள்

மரக்காணத்தில் முதல்- அமைச்சர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிக்கான விழா மேடை அமைக்கும் இடத்தை விழுப்புரம் மாவட்ட கூடுதல் கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மு.க. ஸ்டாலின் மரக்காணம் வருகை: விழா மேடை அமைக்கும் இடத்தில் கூடுதல் கலெக்டர் ஆய்வு

Published On 2023-11-05 07:38 GMT   |   Update On 2023-11-05 07:38 GMT
  • அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
  • பொதுமக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும்.

விழுப்புரம்: 

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் வருகிற 10 -ந் தேதி மகளிர் உரிமைத் தொகை மற்றும் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது இந்நிகழ்ச்சியில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்துகொண்டு பயனாளி களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார். இதனை தொடர்ந்து விழா மேடை அமைப்பதற்கான இடங்களை அமைச்சர் செஞ்சி மஸ்தான் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அப்போது மரக்காணம் கிழக்கு கடற்கரை சாலை ஓரம் நாறவாக்கம் மற்றும் கைப்பணி குப்பம் இடை யில் உள்ள கடற்கரை ஓரமுள்ள ஒரு தனியாருக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்தனர். இந்த இடத்தினை விழுப்புரம் மாவட்ட கூடுதல் ஆட்சியர் ஈஸ்ரூதன் ஜெய் நாராயணன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார் .

அப்போது விழா மேடை எப்படி அமைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் வாகனத்தை எந்த இடத்தில் நிறுத்த வேண்டும். முதல்- அமைச்சருடன் வரும் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எந்தெந்த இடங்களில் பாதுகாப்பாக வாகனங்களை நிறுத்த வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொது மக்களுக்கு எந்தப் பகுதியில் பந்தல்கள் அமைத்து பாதுகாப்பு வழங்க வேண்டும். நிகழ்ச்சிக்கு வரும் பொதுமக்கள் மற்றும் அதிகாரிகளுக்கு போதிய குடிநீர் உணவு இருக்கைகள் மின் வசதி போன்றவைகள் எவ்வாறு அமைத்து தர வேண்டும் போன்றவைகள் குறித்து ஆலோசனை வழங்கினார். அப்போது மரக்காணம் தாசில்தார் பாலமுருகன், விழுப்புரம் வடக்கு மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மரக்காணம் ஒன்றிய சேர்மன் தயாளன், மாவட்ட கவுன்சிலர் புஷ்ப வல்லி குப்புராஜ் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரி கள் உடன் இருந்தனர்.

Tags:    

Similar News