உள்ளூர் செய்திகள்

பரமன்குறிச்சி சமத்துவபுரத்தில் நடைபெறும் பணிகளை அமைச்சர்கள் பெரிய கருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு செய்தபோது எடுத்தபடம்.

பரமன்குறிச்சி சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

Published On 2022-07-02 09:01 GMT   |   Update On 2022-07-02 09:01 GMT
  • பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் அமைச்சர்கள் பெரியகருப்பன், அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.
  • கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங் உட்பட பலர் கலந்து கொண்டனர்

உடன்குடி:

உடன்குடி யூனியனுக்குட்பட்ட பரமன்குறிச்சி அருகே உள்ள பெரியார் நினைவு சமத்துவபுரத்தில் உள்ள வீடுகள், சமுதாய நலக்கூடம், பூங்கா, நியாயவிலை கடை, பெரியார் சிலை மற்றும் தார் சாலைகள் உள்ளிட்ட பொதுமக்களின் அடிப்படை தேவைக்கான அனைத்தும் புதுப்பிக்கும் பணிகள் நடந்து வருகிறது.

இந்த பணிகளை ஊரக உள்ளாட்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன், மீன்வளம், மீனவர்நலன் மற்றும் கால்நடை பராமரிப்புதுறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேரில்ஆய்வு மேற்கொண்டனர்.

திட்ட பணிகளின் மதிப்பீடு என்ன? முறையாக நடக்கிறதா? என்று அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டனர்.

இதில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., உடன்குடி யூனியன் சேர்மன் பாலசிங், திருச்செந்தூர் தாசில்தார் சாமிநாதன், உடன்குடிவட்டார வளர்ச்சி அலுவலர் பொற்செழியன், தி.மு.க. மாணவரணி துணைச் செயலாளர் உமரி சங்கர், மாவட்ட பிரதிநிதி ராஜாபிரபு, கே.டி.சி. தினகர், பெத்தாமுருகன், மாணவரணி அருண்குமார், எள்ளுவிளை கிளைச் செயலாளர் மோகன், ஒன்றிய தகவல் தொழில் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் மற்றும் ஊரக வளர்ச்சி முதன்மை அதிகாரிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News