உள்ளூர் செய்திகள்

கோயம்பேடு குறுங்காலீசுவரர் கோவிலுக்கு புதிய திருத்தேர்- அமைச்சர் சேகர்பாபு

Published On 2023-03-30 09:18 GMT   |   Update On 2023-03-30 09:18 GMT
  • கோயம்பேட்டில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற குறுங்காலீஸ்வரர் கோவிலில் வைகுண்ட பெருமாள் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது.
  • கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருத்தேர் வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

சென்னை:

சட்டசபையில் விருகம்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.வி. பிரபாகராஜா எம்.எல்.ஏ. கேள்வி நேரத்தின்போது பேசியதாவது:-

கோயம்பேட்டில் 1100 ஆண்டு பழமை வாய்ந்த பிரசித்தி பெற்ற குறுங்காலீஸ்வரர் கோவிலில் வைகுண்ட பெருமாள் கோபுரம் மொட்டை கோபுரமாக உள்ளது.

அங்கு ஐந்து நிலை ராஜகோபுரம் அமைத்து தர அரசு ஆவண செய்யுமா? என்றார். மேலும் மகா சிவராத்திரி பங்குனி உத்திரம் கார்த்திகை தீபம் போன்ற நாட்களில் மிகுந்த சிறப்பு கொண்ட கோயம்பேடு குறுங்காலீஸ்வரர் திருக்கோயிலுக்கு திருத்தேர் வழங்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பதில் அளிக்கையில், இவ்வாண்டு சட்டமன்ற உறுப்பினர் தெரிவித்த இரண்டு கோரிக்கையும் நிறைவேற்றும் வகையில் நிதி ஒதுக்கப்பட்டு, ஐந்து நிலை ராஜகோபுரம் அமைக்கப்படுவதுடன், திருத்தேரும் செய்து கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

Tags:    

Similar News