உள்ளூர் செய்திகள்

பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் மெய்யநாதன் வழங்கினார். 

382 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் வழங்கினார்

Published On 2023-05-09 08:19 GMT   |   Update On 2023-05-09 08:19 GMT
  • ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
  • முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

தரங்கம்பாடி:

மயிலாடுதுறை மாவட்ட த்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஈடில்லா ஆட்சி ஈராண்டே சாட்சி சாதனை மலர் மற்றும் அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைப்பெற்றது.

இந்த விழாவிற்கு மாவட்ட கலெக்டர் மகாபாரதி தலைமை தாங்கினார்.

எம்.பி. இராமலிங்கம், எம்.எல்.ஏ. க்கள் நிவேதா எம்.முருகன், பன்னீர்செல்வம், மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், ஊரக வளர்ச்சித்துறை இணை இயக்குனர் ஸ்ரீலேகா தமிழ்ச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற த்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்ய நாதன் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினார். பல்வேறு துறைகளின் கீழ் மொத்தம் 382 பயனாளிகளுக்கு ரூ.6 கோடியே 41 லட்சத்து 80 ஆயிரத்து 349 மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் நீர்வள ஆதாரத்துறை செயற்பொறியாளர் சண்முகம், சீர்காழி வருவாய் கோட்டாட்சியர் அர்ச்சனா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துனை ஆட்சியர் கண்மணி, மயிலாடுதுறை ஒன்றிய குழு தலைவர் காமாட்சி மூர்த்தி, தரங்கம்பாடி பேரூராட்சி தலைவர் சுகுணசங்கரி, அனைத்து துறை அலுவலர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியின் முடிவில் வேளாண்மை துறை இணை இயக்குநர் சேகர் நன்றி கூறினார்.

Tags:    

Similar News